Source: Kattankudi Web Community (KWC)
‘பைபிளின் பழைய ஏற்பாடும் ஓரிறைக் கொள்கையும்’ என்கின்ற கடந்த தொடரில் தீர்க்கதரிசிகள் ஏகத்துவத்தை போதித்ததையும், இயேசு பழைய ஏற்பாட்டை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்திக் கூறியதையும் பார்த்தோம்.
ஓரிறைக் கொள்கையை போதித்த தீர்க்கதரிசிகளின் வரிசையில் ஏகத்துவ பிரச்சாரம் மேற்கொண்ட இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிம் என்பதற்கான சான்றுகளை இத்தொடரில் நோக்குவோம்.
இன்று உலகில் வாழக்கூடிய கிறிஸ்த்தவ அன்பர்கள் இயேசுவை கடவுளின் குமாரர் அல்லது கடவுள் என்று நம்பி வணங்கி வழிபடுகின்றார்கள். ஆனால், முஸ்லிம்கள் ‘சர்வ வல்லமை பொருந்திய கர்த்தரை மாத்திரம் வணங்கி வழிபட வேண்டும். அவருக்கு எதையும், யாரையும் இணையாக்க கூடாது’ என்கின்ற ஏகத்துவ கொள்கையை போதிப்பதற்காக இறைவனால் காலத்திற்கு காலம் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகள் வரிசையில் மிக முக்கியமானதொரு தீர்க்கதரிசி, இறைதூதர் என்று இயேசுவை நம்புகின்றார்கள். மேலும், தீர்க்கதரி சிகள் அனைவரும் முஸ்லிம்களாக இருந்ததால் இயேசு அவர்களும் ஒரு முஸ்லிம் என்று நம்புகின்றார்கள்.
இது குறித்து இறைவேதம் திருக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
“நூஹுக்கு எதை அவன் வலியுறுத்தினானோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக்கினான். (முஹம்மதே!) உமக்கு நாம் அறிவித்ததும் இப்ராஹீம், மூஸா மற்றும் ஈஸா (இயேசு) வுக்கு நாம் வலியுறுத்தியதும் ‘மார்க்கத்தை நிலை நாட்டுங்கள்! அதில் பிரிந்து விடாதீர்கள்!” என்பதே. நீர் எதைநோக்கி அழைக்கிறீரோ அது இணை கற்பிப்போருக்குப் பெரிதாக உள்ளது. அல்லாஹ், தான் நாடியோரைத் தனக்காகத் தேர்வு செய்கிறான். திருந்துவோருக்குத் தன்னை நோக்கி வழிகாட்டுகிறான்.” (திருக்குர்ஆன் 42:13)
அந்த வகையில் இயேசு (அலை) அவர்கள் ஒரு இறைத்தூதராகவும், முஸ்லிமாகவும் இருந்தார்கள். மேலும், இறைத் தூதர் இயேசு (அலை) அவர்களை முஸ்லிம்கள் மிக உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கின்றனர். அவரது பெயரை உச்சரிக்கும் போது அன்னாரின் மீது சர்வ வல்லமை பொருந்திய கர்த்தரின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என்று பிரார்த்தித்து போற்றுகின்றனர்.
இந்த சுருக்கமான அறிமுகத்தோடு பைபிள் மற்றும் திருக்குர்ஆன் ஒளியில் இயேசு குறித்த நோக்குவோம்.
கர்த்தரிடம் கேட்கிறபடி நியாயந் தீர்க்கும் இயேசு
பைபிளின் புதிய ஏற்பாட்டு நூலான யோவான் அதிகாரம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
“நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன் எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை!” யோவான் 5 அதிகாரம், வசனம் 30
மேலுள்ள வசனத்தில் இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள், நான் என் இஷ்டப்படி எதையும் செய்யவில்லை. மாறாக> கர்த்தரிடம் இருந்து எனக்கு எவ்வாறு கட்டளையிடப்படுகின்றதோ, நான் எவ்வாறு கேட்கின்றேனோ அவ்வாறே செயற்படுகின்றேன். என்று கூறுகின்றார்கள். இதுவே இறைத் தூதர்களின் பண்பும், பணியுமாகும்.
இறைவனிடமிருந்து தங்களுக்கு எவ்வாறு இறைத்தூது வருகின்றதோ அவ்வாறே அவர்கள் செயற்பட்டார்கள். இஸ்ரவேல் மக்களுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதரான இயேசு (அலை) அவர்களும் அவ்வாறே செயற்பட்டார்கள். இதோ அருள்மறைக் குர்ஆன் குறிப்பிடுகின்றது.
“இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (அவரை அனுப்பினான்.) ‘உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்;அல்லாஹ்வின்விருப்பப்படி அது பறவையாக ஆகும்.அல்லாஹ்வின்விருப்பப்படி பிறவிக் குருடையும், குஷ்டத்தையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குச் சான்று உள்ளது (என்றார்)”. (அல்குர்ஆன் 03:49)
ஆகவே, தன்னால் சுயமாக எதுவும் செய்ய முடியாது. மாறாக> சர்வ வல்லமை பொருந்திய கர்த்தரின் நாட்டப்படியே சகல காரியங்களும் நடைபெற முடியும் என்று யார் நம்புகின்றாரோ அவர் ஒரு முஸ்லிம். எனவே, இயேசு (அலை) அவர்களும் ஒரு முஸ்லிமாவார்கள்.
கர்த்தரை மாத்திரம் வணங்குவதே முதலாம் கற்பனை
இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் கர்த்தராகிய இறைவனை மாத்திரம் வணங்குமாறு கட்டளையிட்டதாக மத்தேயு வசனம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
“போதகரே! நியாயப் பிரமாணத்தில் எந்தக் கற்பனை பிரதானமானதென்று கேட்டான். இயேசு அவனை நோக்கி உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனத்தோடும் அன்பு கூருவாயாக. இது முதலாம் பிரதான கற்பனை.” (மத்தேயு 22:36-38)
மேலுள்ள வசனத்தில் இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள், முழு மனதோடு சர்வ வல்லமை பொருந்திய இறைவனை அன்பு கூறுவதே (வணங்கி வழிபடுவதே) மிகப் பிரதானமானது என்று கூறுகின்றார்கள்.. இவ்வசனத்தை மிக உன்னிப்பாக நாம் கவனிக்க கடமைப்பட்டுள்ளோம். கிறிஸ்த்தவ அன்பர்கள் சொல்வது போன்று இயேசு கடவுளாக, கடவுளின் மகனாக இருந்திருந்திருந்தால் தன்னைவணங்குவதை பிரதானமானது என்று கூறியிருப்பார்கள். இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் குறைந்தபட்சம் கர்த்தருடன் இணைத்துதன்னையும்வணங்குமாறு கூட கட்டளையிடவில்லை. மாறாக, தேவனாகிய கர்த்தரை, மாத்திரம் அல்லவா வணங்கச் சொல்கின்றார்கள்.
இதோ திருமறைக் குர்ஆன் பேசுகின்றது.
“மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள்! இதனால் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள்.” (அல் குர்ஆன் 02:21)
இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் தனது போதனைகளில் மிகப் பிரதான விடயமாக கர்த்தர் ஒருவரே கர்த்தர். எனவே> அவனையே வணங்கி வழிபட வேண்டும் எனப் போதிக்கின்றார்கள்.
யார் ஒருவர் கர்த்தராகிய ஏக இறைவனுக்கு மாத்திரம் வணக்கம் செலுத்தப்;பட வேண்டும் என்று நம்பி, அதன்படி செயற்படுகின்றாரோ அவர் ஒரு முஸ்லிம். எனவே> இயேசு (அலை) அவர்களும் ஒரு முஸ்லிமாவார்கள்.
தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்
இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் தன்னை வணங்காது> ஏக இறைவனை மாத்திரம் கர்த்தராக ஏற்றுச் செயற்படுவதே கற்பனைகளில் பிரதானமானது, எனப் போதித்ததாக புதிய ஏற்பாட்டு நூலான மாற்கு அதிகாரம் குறிப்பிடுகின்றது.
“இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். (மாற்கு அதிகாரம் 12 : 29 )
இதனை திருமறைக் குர்ஆனும் பின்வருமாறு உறுதி செய்கின்றது.
“உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.” (அல்குர்ஆன் 02:163)
யார் கர்த்தர் ஒருவரே வணங்கி வழிபடத் தகுதியானவர் என நம்புகின்றாரோ அவர் ஒரு முஸ்லிம். எனவே, இயேசு (அலை) அவர்களும் ஒரு முஸ்லிமாவார்கள்.
பிதாவாகிய கர்த்தரின் சித்தப்படியே காரியங்கள் நடைபெறும்
கர்த்தரின் நாட்டப்படியே சகல காரியங்களும் நடைபெறும். மாறாக, சர்வ வல்லமை பொருந்திய கர்த்தரின் அதிகாரத்தில் தனக்கு எவ்வித பங்கும் இல்லை. பரலோக இராஜ்ஜியத்தில் தனக்கு அருகாமையில் யார் இருக்க வேண்டும் என்று கர்த்தர் நாடுகின்றாரோ அவரே தனக்கு நெருக்கமானவராக இருக்க முடியும். தான் விரும்புவர்களை தனக்கு நெருக்கமாக வைத்துக் கொள்கின்ற அதிகாரம் தன்னிடம் இல்லை. மாறாக, அந்த அதிகாரம் கர்த்தரிடமே உண்டு என இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள். பறைசாற்றுகின்றார்கள்.
‘அப்பொழுது செபெதேயுவின் குமாரருடைய தாய் தன் குமாரரோடு கூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்து கொண்டு, உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ண வேண்டும் என்றாள். அவர் அவளை நோக்கி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள் உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டு பேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்ய வேண்டும் என்றாள். இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக் கொள்கிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா? என்றார். அதற்கு அவர்கள் கூடும் என்றார்கள். அவர் அவர்களை நோக்கி, என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படிஎன்பிதாவினால்எவர்களுக்குஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
(மத்தேயு 20:20-23)
கர்த்தரே சகல காரியங்களின் மீதும் ஆற்றல் உள்ளவர் (அல்குர்ஆன் 39:62), கர்த்தரின் சித்தப்படியே சகல காரியங்களும் நடைபெறுகின்றன (அல்குர்ஆன் 03:49) என்பதை அருள்மறைக்குர்ஆனும் உறுதி செய்கின்றது.
ஆகவே, யார் கர்த்தரின் சித்தப்படி தமது காரியங்களை அமைத்துக் கொள்கின்றாரோ, கர்த்தரின் சித்தப்படியே அனைத்துக் காரியங்களும் நடைபெறுவதாக நம்புகின்றாரோ அவர் ஒரு முஸ்லிம். எனவே, இயேசு (அலை) அவர்களும் ஒரு முஸ்லிமாவார்கள்.
தேவனுடைய விரலினால் பிசாசுகளைத் துரத்திய இயேசு
இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் இறைவனோ அல்லது இறைமகனோ கிடையாது. மாறாக, இறைவனை சார்ந்து, இறைகட்டளைகளுக்கு அடிபணிந்து வாழ்ந்த ஒரு தீர்க்கதரிசி என்பதை பைபிளின் புதிய ஏற்பாட்டு நூல்களான யோவான், லூக்கா அதிகாரங்கள் பின்வருமாறு இரத்தினச் சுருக்கமாக விபரிக்கின்றது.
‘நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.’ (யோவான் 5 அதிகாரம் வசனம் 30)
‘நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.’ (லூக்கா 11 அதிகாரம் வசனம் 20)
மேலுள்ள வசனங்களில் இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் தேவனாகிய இறைவனை சார்ந்து, தேவனாகிய கர்த்தரின் சித்தப்படியே காரியமாற்றுவதாக> பிசாசுகளைத் துரத்துவதாக குறிப்பிடுகின்றார்கள்.
இதோ திருமறைக்குர்ஆன் பேசுகின்றது.
‘அவர்கள் புறக்கணித்தால் எனக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; அவனையே சார்ந்துள்ளேன்; அவனே மகத்தான அர்ஷின் இறைவன் என கூறுவீராக! (அல்குர்ஆன் 09:129)
யார் கர்த்தரை சார்ந்து, கர்த்தரின் கட்டளைக்கிணங்க செயற்படுகின்றாரோ அவர் ஒரு முஸ்லிமாவர். எனவே, இயேசு (அலை) அவர்களும் ஒரு முஸ்லிமாவர்கள்.
II
கடந்த தொடர்களில் தீர்க்கதரிசிகள் ஏகத்துவத்தை போதித்ததையும், இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிம் என்பதற்கான சான்றுகளையும் நோக்கினோம்.
அதன் தொடரில் இயேசுவின் போதனைகள் என்று நம்பப்படுகின்ற பைபிளின் புதிய ஏற்பாட்டில் காணப்படுகின்ற ‘இயேசு ஒரு முஸ்லிம்’ என்பதற்கான சான்றுகளை தொடர்ந்தும் நோக்குவோம்.
இயேசுவை கர்த்தர் என அழைப்பவன் அக்கிரமக்காரன்
இயேசு (அலை) அவர்கள் கூறியதாக புதிய ஏற்பாட்டு நூலான மத்தேயு அதிகாரம் பின்வருமாறு கூறுகின்றது.
‘பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. (மத்தேயு 12 அதிகாரம் வசனம் 28)
இயேசுவை ‘கர்த்தராக’ நினைத்து வழிபடும் மக்களுக்கு எச்சரிக்கும் விதத்தில், கர்த்தராகிய இறைவனின் கட்டளைப்படி செயற்படுகின்றவரே நியாயத் தீர்ப்பு நாளில் வெற்றியடைய முடியும். மாறாக, தன்னை நோக்கி ‘கர்த்தாவே’ என்று அழைப்பவர்கள் அக்கிரமக்காரர்கள் என்று உவமையுடன் இயேசு (அலை) அவர்கள் மிகத் தெளிவாக கூறியுள்ளார்கள்.
உலகப் பொதுமறை திருக்குர்ஆன் பேசுகின்றது.
‘மர்யமின் மகன் ஈஸாவே! ‘அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!’ என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?” என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, ‘நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன் என்று அவர் பதிலளிப்பார். நீ எனக்குக் கட்டளையிட்ட படி ‘எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!’ என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.’ (அல்குர்ஆன் 5:116-117)
நியாயத் தீர்ப்பு நாளில் கர்த்தரின் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது, தன்னை வணங்கியவர்களை இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் கைவிட்டுவிடுவதோடு, அவர்களுக்கு எதிராகவும் சாட்சி சொல்வார்கள் என்பதை மேலுள்ள இறைவசனத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
யார், ஏகனாகிய கர்த்தரை மாத்திரம் வணங்கி வழிபட வேண்டும், இறைத் தூதர்களுக்கு கடவுள் தன்மை கிடையாது. அவர்களை வணங்கி வழிபடுவது மன்னிக்க முடியாத மிகப் பெரிய பாவம், மறைவானஅறிவு சர்வ வல்லமை பொருந்திய கர்த்தருக்கு மாத்திரம் உண்டு என நம்பி, அதனை போதிக்கின்றாரோ அவர் ஒரு முஸ்லிமாவார். எனவே, இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிமாவார்கள்.
பரலோகத்திலிருக்கின்ற கர்த்தரே கடவுள்
இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் போதித்ததாக கிறிஸ்த்தவ அன்பர்களால் நம்பப்படுகின்ற புதிய ஏற்பாட்டு நூலான மத்தேயு ஓரிறைக் கொள்கையை பின்வருமாறு போதிக்கின்றது.
‘பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.’ (மத்தேயு 23:9)
பைபிளில் ‘பிதா’ என்பது ‘கடவுள்’ என்ற அர்த்தத்திலும்இ ‘குமாரன்’ என்பது ‘கர்த்தரின் அடியார்கள்’ என்ற அர்த்தத்திலும் பிரயோகிக்கப்பட்டுள்ளது. (கர்த்தர் நாடினால் இது குறித்து மற்றொரு சந்தர்ப்பத்தில் விரிவாக நோக்குவோம்.)
ஈடு இணையற்ற ஏக இறைவனை மாத்திரம் வணங்க வேண்டும் என்று இயேசு (அலை) உள்ளிட்ட இறைத்தூதர்கள் போதித்ததாக இறைவேதம் திருக்குர்ஆன் போதிக்கின்றது.
‘அளவற்ற அருளாளனைத் தவிர வணங்கப்படும் கடவுள்களை நாம் ஆக்கியுள்ளோமா?’ என்று உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களிடம் கேட்பீராக! (திருக்குர்ஆன் 43:45)
யார் அளவற்ற அருளாளனான ஒரே இறைவனை தவிர வணங்குவதற்கு தகுதியான கடவுள் இல்லை என்று நம்புகின்றா ரோ அவர் ஒரு முஸ்லிம். எனவேஇ இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிமாவார்கள்.
அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாத கர்த்தர்
கர்த்தரானவர் சர்வ வல்லமை பொருந்தியவராக, தனது அதிகாரத்தில் யாரையும் பங்காளியாக்காதவராக, தனது அதிகாரத்தின் மீது படைப்பினங்கள் தாக்கம் செலுத்தக் கூடிய அளவிற்கு பலவீனம் அற்றவராக இருக்க வேண்டுமென இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் போதித்தாக பைபிளின் மத்தேயு அதிகாரம் விபரிக்கின்றது.
‘அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. (மத்தேயு, 12 அதிகாரம், வசனம் 28)
இதனை திருமறைக் குர்ஆனும் பின்வருமாறு உறுதி செய்கின்றது.
‘அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான். (திருக்குர்ஆன் 25:2)
யார் கர்த்தர் ஒருவரே சர்வ வல்லமை பொருந்தியவர். அவரது வல்லமையில் யாரும், எந்த சக்தியும் பங்காளியாகவோ, ஆதிக்கம் செலுத்தவோ முடியாது என்று நம்புகின்றாரோ அவர் ஒரு முஸ்லிம். எனவே, இறைத்தூதர் இயேசு (அலை) அவர்களும் முஸ்லிமாவார்கள்.
கர்த்தரால் தன்னளவில் உயர்த்தப்பட்ட இயேசு
இறைத்தூதர் இயேசு (அலை) அவர்களை, ஏக இறைவனை நிராகரித்தவர்கள் கொலை செய்ய முயற்சித்ததால் ஏகனாகிய கர்த்தர் இயேசு (அலை) அவர்களை தன்னளவில் உயர்த்திக் கொண்டார்.. ‘தான் கர்த்தரிடம் செல்வேன்’ என்று இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் கூறியதாக யோவான் அதிகாரம் பின்வருமாறு கூறுகின்றது.
‘நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள். ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார். (யோவான், 10 அதிகாரம், வசனம் 29)
இதோ இறைவேதம் திருக்குர்ஆன் பேசுகின்றது.
‘மாறாக, அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான். வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு எதிரான சாட்சியாக இருப்பார்.’ (அல்குர்ஆன் 4:158, 159)
எனவே, அல்லாஹ்வால் தன்னளவில் உயர்த்திக் கொள்ளப்பட்ட இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிமாவார்கள்.
தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்
‘ஒருவன் இயேசுவை நோக்கி நித்திய ஜீவனை அடைய (நியாயத் தீர்ப்பு நாளில் வெற்றியடைய) வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார்கள்.
‘அப்பொழுது ஒருவன் வந்து, (இயேசுவை) நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான், அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.’ (மத்தேயு 19:16,17)
கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்று கூறிய இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை ‘கர்த்தர் ஒருவரே வணக்கத்திற்கு தகுதியானவர்’ என்று நம்புவதாகும் என்று தெளிவுபடுத்துகின்றார்கள். அதுமாத்திரமன்றி, இயேசுவை நோக்கி வந்த மனிதர், போதகரே என்று அழைத்ததிலிருந்து நெறிபிறழ்ந்தவர்கள்தான் இயேசுவை கர்த்தர் என்று வாதிட்டார்கள் என்பதையும், இயேசுவின் போதனைக்கு செவிசாய்த்த மக்கள் இயேசு ‘போதகர்’தான் (இறைத்தூதர்) என்பதை விளங்கி வைத்திருந்தார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முடிகின்றது.
‘இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள் நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.’ (மாற்கு அதிகாரம் 12:29)
இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் கர்த்தர் ஒருவரையே வணங்குமாறு போதித்ததை திருக்குர்ஆனின் 5:116 வசனம் ‘எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்’ என்று போதித்ததாக உறுதிப்படுத்துகின்றது.
கர்த்தர் ஏகன் என்றும், கர்த்தராகிய இறைவனுக்கு மாத்திரம் வணக்கம் செலுத்த வேண்டும் என்றும் யார் நம்புகின்றாரோ அவர் ஒரு முஸ்லிம். எனவே, இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிமாவார்கள்.
கர்த்தருக்கு மாத்திரம் ஆராதனை செய்ய பணித்த இயேசு
இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டதாக புதிய ஏற்பாட்டு நூல் மத்தேயு குறிப்பிடுகின்றது.
‘அப்பொழுது இயேசு: ‘அப்பாலே போ சாத்தானே! உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே’ என்றார்.’ (மத்தேயு 4:10)
இதனை இறைவேதம் திருக்குர்ஆன் பின்வருமாறு உறுதிசெய்கின்றது.
”அல்லாஹ்வே எனது இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேரான வழியாகும்” (எனவும் கூறினார்)’ (அல்குர்ஆன் 03:51)
சத்தியமும், ஜீவனுமாயிருக்கின்ற சர்வ வல்லமை பொருந்திய கர்த்தருக்கு மாத்திரம் அடிபணிந்து, கர்த்தரை மாத்திரம் வணங்கி வழிபடுபவர் ஒரு முஸ்லிம். எனவே, இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிமாவார்கள்.
ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருக்க முடியாது
கடவுள் ஒருவர்தான். ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருக்க முடியாது என்பதை பின்வரும் உவமை மூலம் இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் கூறியதாக பைபிள் குறிப்பிடுகின்றது.
‘இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது. ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக் கொண்டு மற்றவனை அசட்டை பண்ணுவான்’ (மத்தேயு 6:24)
ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருக்க முடியாது என்பதை இறைவேதம் திருக்குர்ஆனும் பின்வருமாறு அழகுற எடுத்தியம்புகின்றது.
‘அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்’. (அல்குர்ஆன் 21:22)‘அவர்கள் கூறுவது போல் அவனுடன் பல கடவுள்கள் இருந்திருந்தால் அவர்களும் அர்ஷுடைய (இறை)வனிடம் (சரணடைய) ஒரு வழியைத் தேடியிருப்பார்கள் என்று கூறுவீராக! அவர்கள் கூறுவதை விட்டும் அவன் தூயவன். மிக மிக உயர்ந்தவன். (அல்குர்ஆன் 17:42-43)
யார் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருக்க முடியாது என்று நம்புகின்றாரோ அவர் ஒரு முஸ்லிம். எனவே, இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிமாவார்கள்.
பைபிளின் புதிய ஏற்பாடு ‘இயேசுவின் போதனைகள்’ என்று கிறிஸ்த்தவ அன்பர்களால் நம்பப்படுகின்றது. பைபிளில் மனிதர்களின் கருத்துக்கள் உட்புகுத்தப்பட்டு, கூட்டல், குறைத்தல் செய்யப்பட்டு பைபிள் புனிதத் தன்மையை இழந்துவிட்ட போதிலும்இ ஆங்காங்கே காணப்படுகின்ற பல பைபிள் வசனங்கள் இயேசு (அலை) அவர்கள் ஓரிறைக் கொள்கையைப் போதித்த ஒரு முஸ்லிம் தான் என்பதை பறை சாற்றி நிற்கின்றன.
இறைவன் நாடினால் இயேசு ஒரு முஸ்லிம் என்பதற்கான சான்றுகளை தொடர்ந்தும் நோக்குவோம்.
III
கடந்த தொடர்களில் இயேசு (அலை) அவர்கள் ஒருமுஸ்லிம் என்பதை உறுதிப்படுத்தக்கூடிய சான்றுகளை கிறிஸ்த்தவர்களால் இறைவேதமாக நம்பப்படுகின்ற பைபிளிலிருந்து நோக்கினோம்.
அதன்தொடரில் நியாத்தீர்ப்புநாளில் வெற்றியடைய -நித்தியஜீவனை அடைய வேண்டுமாயின் ஒருவர் எவ்வாறுநடந்து கொள்ளவேண்டும் என்று இயேசு செய்த போதனைகள் இயேசு ஒருமுஸ்லிம் என்பதை எள்முனையளவுகூட சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து நிற்கின்றது. அவற்றைநோக்குவோம்.
நித்தியஜீவனைஅடையவழிஎன்ன?பரலோக இராஜ்ஜியத்தில் வெற்றியடையவேண்டுமானால் எவ்வாறானநன்மைகளை செய்யவேண்டும் என்று கேட்டமனிதனுக்கு இயேசுபின்வருமாறு பதிலளித்ததாக புதிய ஏற்பாட்டு நூலானபைபிள் குறிப்பிடுகின்றது. ‘அப்பொழுது ஒருவன்வந்து, அவரைநோக்கி நல்லபோதகரே, நித்தியஜீவனைஅடைவதற்கு நான்எந்தநன்மையைச் செய்யவேண்டும் என்றுகேட்டான். அதற்கு அவர் நீஎன்னைநல்லவன் என்றுசொல்வானேன்?தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும்இல்லையே .நீ ஜீவனில்பிரவேசிக்கவிரும்பினால் கற்பனைகளைக்கைக்கொள் என்றார். அவன்அவரைநோக்கி எவைகளை என்றுகேட்டான். அதற்குஇயேசு கொலைசெய்யாதிருப்பாயாக விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, களவுசெய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சிசொல்லாதிருப்பாயாக. உன்தகப்பனையும் உன்தாயையும் கனம்பண்ணுவாயாக உன்னிடத்தில் நீஅன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார்.’ – மத்தேயு 16-19
கொலை
நித்தியஜீவனை அடையவேண்டுமானால் கொலைசெய்யாதிருக்க வேண்டும் என்று மத்தேயு அதிகாரம் கூறுகின்றது. கொலைகுறித்து இறைவேதம் திருக்குர்ஆன்குறிப்பிடுகையில்,
‘கொலைக்குப்பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப்பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலைசெய்தால் அவர்எல்லாமனிதர்களையும் கொலைசெய்தவர் போலாவார்’ (அல்குர்ஆன் 5:32) என்று குறிப்பிடுகின்றது.
நித்தியஜீவனை அடையவேண்டுமானால் கொலைசெய்யாதிருக்க வேண்டும் என்று மத்தேயு அதிகாரம் கூறுகின்றது. கொலைகுறித்து இறைவேதம் திருக்குர்ஆன்குறிப்பிடுகையில்,
‘கொலைக்குப்பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப்பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலைசெய்தால் அவர்எல்லாமனிதர்களையும் கொலைசெய்தவர் போலாவார்’ (அல்குர்ஆன் 5:32) என்று குறிப்பிடுகின்றது.
அநியாயமாக ஒருமனிதரைகொலைசெய்தவர் எல்லாமக்களையும் கொலைசெய்தபாவத்தை சம்பாதித்துக்கொண்டவர் என இஸ்லாம் கூறுகின்றது. எனவே, ஓரிறைக்கொள்கையை ஏற்று, கொலை என்கின்ற கொடியபாவத்திலிருந்து விலகி இருப்பவர் முஸ்லிமாவார்.
ஆகவே, இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிமாவார்கள்.
ஆகவே, இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிமாவார்கள்.
விபச்சாரம்
நித்தியஜீவனைஅடையவேண்டுமானால் விபச்சாரம்செய்யாதிருக்கவேண்டும் என்று பைபிளின் புதிய ஏற்பாட்டு நூலானமத்தேயு அதிகாரம் கூறுகின்றது. விபச்சாரம் குறித்து திருக்குர்ஆன் குறிப்பிடுகையில்,
விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அதுவெட்கக்கேடானதாகவும், தீயவழியாகவும்இருக்கிறது. (அல்குர்ஆன் 17:32)
இஸ்லாமிய மார்க்கம் விபச்சாரத்தை தடுத்திருப்பதுமாத்திரமன்றி விபச்சாரத்தின்பக்கம் நெருக்கிவைக்கும் அனைத்துவழிகளையும் பாவம்என்று கூறுகின்றது. எனவே, ஏகஇறைவனை நம்பிவிபச்சாரத்திலிருந்து தவிர்ந்து வாழ்பவர் முஸ்லிமாவார்.ஆகவே, இறைத்தூதர்இயேசு (அலை) அவர்கள் ஒருமுஸ்லிமாவார்கள்.
நித்தியஜீவனைஅடையவேண்டுமானால் விபச்சாரம்செய்யாதிருக்கவேண்டும் என்று பைபிளின் புதிய ஏற்பாட்டு நூலானமத்தேயு அதிகாரம் கூறுகின்றது. விபச்சாரம் குறித்து திருக்குர்ஆன் குறிப்பிடுகையில்,
விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அதுவெட்கக்கேடானதாகவும், தீயவழியாகவும்இருக்கிறது. (அல்குர்ஆன் 17:32)
இஸ்லாமிய மார்க்கம் விபச்சாரத்தை தடுத்திருப்பதுமாத்திரமன்றி விபச்சாரத்தின்பக்கம் நெருக்கிவைக்கும் அனைத்துவழிகளையும் பாவம்என்று கூறுகின்றது. எனவே, ஏகஇறைவனை நம்பிவிபச்சாரத்திலிருந்து தவிர்ந்து வாழ்பவர் முஸ்லிமாவார்.ஆகவே, இறைத்தூதர்இயேசு (அலை) அவர்கள் ஒருமுஸ்லிமாவார்கள்.
களவு
கிறிஸ்த்தவ அன்பர்களால் இறைவேத மாகநம்பப்படுகின்ற பைபிள்களவு செய்யாதிருக்கவேண்டும் என்றுகூறுகின்றது. களவுகுறித்து திருமறைக்குர்ஆன் குறிப்பிடுகையில்,
கிறிஸ்த்தவ அன்பர்களால் இறைவேத மாகநம்பப்படுகின்ற பைபிள்களவு செய்யாதிருக்கவேண்டும் என்றுகூறுகின்றது. களவுகுறித்து திருமறைக்குர்ஆன் குறிப்பிடுகையில்,
திருட்டைபாவம் என்றுகூறுகின்ற இஸ்லாமியமார்க்கம் திருடர்களே இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்காக திருட்டுக்குற்றம் நிரூபிக்கப்பட்டால்,அவர்களின் கரங்களைதுண்டிக்குமாறு கூறுகின்றது. (அல்குர்ஆன் 5:38)
திருட்டு க்குற்றத்திற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்ற நாடுகளில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது திருட்டுக்குற்றம் மிககுறைந்த எண்ணிக்கையிலேயே காணப்படு கின்றது என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்ற அதேவேளை வறுமையின்காரணமாக திருட்டு இடம்பெறாமல் தடுப்பதற்காக ஸக்காத் என்கின்றஏழைவரிதிட்டத்தை இஸ்லாமியமார்க்கம் அமுல்படுத்தி வருகின்றது.
எனவே, நிகரற்ற இறைவனை விசுவாசித்து,களவு என்கின்றபாவத்திலிருந்து தவிர்ந்திருப்பவர் முஸ்லிமாவார். ஆகவே, இறைத்தூதர்இயேசு (அலை) அவர்கள்ஒருமுஸ்லிமாவார்கள். பொய்ச்சாட்சி பைபிளின் மத்தேயு அதிகாரம் ‘பொய்ச்சாட்சிசொல்லாதிருப்பாயாக’ எனஇயேசு (அலை) அவர்கள் போதிதத்தாக குறிப்பிடுகின்றது.
திருட்டு க்குற்றத்திற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்ற நாடுகளில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது திருட்டுக்குற்றம் மிககுறைந்த எண்ணிக்கையிலேயே காணப்படு கின்றது என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்ற அதேவேளை வறுமையின்காரணமாக திருட்டு இடம்பெறாமல் தடுப்பதற்காக ஸக்காத் என்கின்றஏழைவரிதிட்டத்தை இஸ்லாமியமார்க்கம் அமுல்படுத்தி வருகின்றது.
எனவே, நிகரற்ற இறைவனை விசுவாசித்து,களவு என்கின்றபாவத்திலிருந்து தவிர்ந்திருப்பவர் முஸ்லிமாவார். ஆகவே, இறைத்தூதர்இயேசு (அலை) அவர்கள்ஒருமுஸ்லிமாவார்கள். பொய்ச்சாட்சி பைபிளின் மத்தேயு அதிகாரம் ‘பொய்ச்சாட்சிசொல்லாதிருப்பாயாக’ எனஇயேசு (அலை) அவர்கள் போதிதத்தாக குறிப்பிடுகின்றது.
இறைநம்பிக்கையாளர்கள் குறித்து அருள்மறைக் குர்ஆன்குறிப்பிடுகையில்,
‘இன்னும்அவர்கள் எத்தகையோரென்றால் பொய்ச்சாட்சி சொல்லமாட்டார்கள்’ (அல்குர்ஆன் 26:72) என்று குறிப்பிடுகின்றது. கர்த்தரைமாத்திரம் வணங்கிவழிபட் டுபொய்ச்சாட்சி சொல்லாமல்தனது வாழ்வைஅமைத்துக் கொள்பவர் முஸ்லிமாவார். ஆகவே, இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள்ஒருமுஸ்லிமாவார்கள்.
‘இன்னும்அவர்கள் எத்தகையோரென்றால் பொய்ச்சாட்சி சொல்லமாட்டார்கள்’ (அல்குர்ஆன் 26:72) என்று குறிப்பிடுகின்றது. கர்த்தரைமாத்திரம் வணங்கிவழிபட் டுபொய்ச்சாட்சி சொல்லாமல்தனது வாழ்வைஅமைத்துக் கொள்பவர் முஸ்லிமாவார். ஆகவே, இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள்ஒருமுஸ்லிமாவார்கள்.
பெற்றோரை கனம்பண்ணுதல்
உன்தகப்பனையும் உன்தாயையும் கனம் பண்ணுவாயாக! என்றுஇயேசு (அலை) அவர்கள் போதித்தாக பைபிள் குறிப்பிடுகின்றது.
பெற்றோர கனம்பண்ணுவதைப்பற்றி இறைவேதம் திருக்குர்ஆன் குறிப்பிடுகையில்,’பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்! என்றுஉமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும்அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்துவிட்டால் அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக்கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக! (அல்குர்ஆன் 17:23)
மேலும், சர்வவல்லமைபொருந்திய கர்த்தர்தனக்கு அடுத்ததாக பெற்றோருக்கு நன்றியுடன் நடக்கவேண்டும் என கட்டளைபிறப்பித்துள்ளதை அல்குர்ஆன் பின்வருமாறு கூறிக்காட்டுகின்றது.
‘எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பிவருதல் உண்டு’ (அல்குர்ஆன் 31:14)
எனவே, இறைவனுக்கு வழிப்பட்டு, தாய், தந்தையருக்கு கனம்பண்ணி தனதுவாழ்வை அமைத்துக்கொள்பவர் முஸ்லிமாவார். ஆகவே, பெற்றோருக்கு கனம்பண்ணுமாறு போதித்த இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் ஒருமுஸ்லிமாவார்கள்.
பெற்றோர கனம்பண்ணுவதைப்பற்றி இறைவேதம் திருக்குர்ஆன் குறிப்பிடுகையில்,’பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்! என்றுஉமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும்அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்துவிட்டால் அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக்கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக! (அல்குர்ஆன் 17:23)
மேலும், சர்வவல்லமைபொருந்திய கர்த்தர்தனக்கு அடுத்ததாக பெற்றோருக்கு நன்றியுடன் நடக்கவேண்டும் என கட்டளைபிறப்பித்துள்ளதை அல்குர்ஆன் பின்வருமாறு கூறிக்காட்டுகின்றது.
‘எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பிவருதல் உண்டு’ (அல்குர்ஆன் 31:14)
எனவே, இறைவனுக்கு வழிப்பட்டு, தாய், தந்தையருக்கு கனம்பண்ணி தனதுவாழ்வை அமைத்துக்கொள்பவர் முஸ்லிமாவார். ஆகவே, பெற்றோருக்கு கனம்பண்ணுமாறு போதித்த இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் ஒருமுஸ்லிமாவார்கள்.
பிறஉயிர்களிடத்தில்அன்புகூருதல்
பிறஉயிர்களிடத்தில் அன்புகூருமாறு, ஜீவகாருண்யத்தை இயேசு (அலை) அவர்கள் போதித்ததாக பைபிளின்மத்தேயு சுவிசேசம் விபரிக்கின்றது.
ஜீவகாருண்யத்தை குறித்து இஸ்லா ம்என்னகூறுகின்றது என்றுசற்று நோக்குவோமாயின்,.
‘உயிரினங்கள்மீது அம்பெறிந்து பழகுவதை இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்’ (ஸஹீஹுல் புஹாரி-5515)
‘தாகத்தோடு இருந்தநாய்க்கு நீர்புகட்டியவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாக நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (ஸஹீஹுல் புஹாரி-2303)
‘பூனையொன்றைக்கட்டிப்போட்டு தான்அதற்கு உணவு கொடுக்காமலும், பூனைதானாகத் தன்உணவைத்தேடிக்கொள்ள அவிழ்த்துவிடாமலும் இருந்து அந்தப்பூனையைசாகடித்த பெண்நரகில் நுழைவாள் என்று அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (ஸஹீஹுல் புஹாரி-2365)
எனவே, கர்த்தரை உரியமுறையில் விசுவாசித்து, பிறஉயிர்களிடத்திலும் அன்புகூர்ந்து வாழ்பவர் முஸ்லிமாவார்.
பிறஉயிர்களிடத்தில் அன்புகூருமாறு, ஜீவகாருண்யத்தை இயேசு (அலை) அவர்கள் போதித்ததாக பைபிளின்மத்தேயு சுவிசேசம் விபரிக்கின்றது.
ஜீவகாருண்யத்தை குறித்து இஸ்லா ம்என்னகூறுகின்றது என்றுசற்று நோக்குவோமாயின்,.
‘உயிரினங்கள்மீது அம்பெறிந்து பழகுவதை இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்’ (ஸஹீஹுல் புஹாரி-5515)
‘தாகத்தோடு இருந்தநாய்க்கு நீர்புகட்டியவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாக நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (ஸஹீஹுல் புஹாரி-2303)
‘பூனையொன்றைக்கட்டிப்போட்டு தான்அதற்கு உணவு கொடுக்காமலும், பூனைதானாகத் தன்உணவைத்தேடிக்கொள்ள அவிழ்த்துவிடாமலும் இருந்து அந்தப்பூனையைசாகடித்த பெண்நரகில் நுழைவாள் என்று அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (ஸஹீஹுல் புஹாரி-2365)
எனவே, கர்த்தரை உரியமுறையில் விசுவாசித்து, பிறஉயிர்களிடத்திலும் அன்புகூர்ந்து வாழ்பவர் முஸ்லிமாவார்.
ஆகவே, இறைத்தூதர்இயேசு (அலை) அவர்கள் ஒருமுஸ்லிமாவார்கள்.
எனவே, இயேசுபோதித்த ஏகத்துவக் கொள்கையை ஏற்று, சர்வவல்லமை பொருந்திய கர்த்தருக்கு யாதொன்றையும் இணையாக்காது கொலை, விபச்சாரம், களவு, பொய்ச்சாட்சி, பெற்றோரைதுன்புறுத்தல், ஜீவகாருண்யமின்மை போன்ற கொடியபாவங்களிலிருந்து தவிர்ந்துவாழ்பவர் ஒருமுஸ்லிம்.
ஆகவே, இவைகளைபோதித்து, அதன்படிவாழ்ந்த இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள். இறைவன் நாடினால் இயேசு ஒருமுஸ்லிம் என்பதற்கான சான்றுகளை தொடர்ந்தும் நோக்குவோம்.
எனவே, இயேசுபோதித்த ஏகத்துவக் கொள்கையை ஏற்று, சர்வவல்லமை பொருந்திய கர்த்தருக்கு யாதொன்றையும் இணையாக்காது கொலை, விபச்சாரம், களவு, பொய்ச்சாட்சி, பெற்றோரைதுன்புறுத்தல், ஜீவகாருண்யமின்மை போன்ற கொடியபாவங்களிலிருந்து தவிர்ந்துவாழ்பவர் ஒருமுஸ்லிம்.
ஆகவே, இவைகளைபோதித்து, அதன்படிவாழ்ந்த இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள். இறைவன் நாடினால் இயேசு ஒருமுஸ்லிம் என்பதற்கான சான்றுகளை தொடர்ந்தும் நோக்குவோம்.
IV
கடந்த தொடர்களில் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிம் என்பதை நிரூபித்து நிற்கும் ஓரிறைக் கொள்கையை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் பைபிள் வசனங்கள், கொலை, விபச்சாரம், களவு, பொய்ச்சாட்சி, பெற்றோரை துன்புறுத்தல், ஜீவகாருண்யமின்மை போன்ற கொடிய பாவங்களிலிருந்து தவிர்ந்து வாழ்ந்தாலே ஒருவர் நித்திய ஜீவனை அடையமுடியும்- நியாயத் தீர்ப்பு நாளில் வெற்றியடைய முடியும் என்பதற்கான சான்றுகளை கடந்த தொடர்களில் நோக்கினோம்.
அதன் தொடரில் வன்கொடுமையான வட்டி குறித்து திருமறைக் குர்ஆனும், பைபிளும் என்ன சொல்கின்றது என நோக்குவோம்.
வட்டி VS வியாபாரம்
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களது காலம் முதல் இற்றை வரை வட்டியும் வியாபாரமும் ஒன்றுதான் என வாதிடுகின்ற ஒரு சாரார் இருந்தே வருகின்றார். இவ்வட்டி குறித்து இறைவேதம் திருக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
“வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். ”வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.” (அல்குர்ஆன் 2:275)
திருக்குர்ஆனின் போர்ப்பிரகடனம்
ஒரு மனிதன் கஷ்ட நிலையில் இருக்கும் போது உதவி செய்யுமாறு வழிகாட்டியுள்ள இஸ்லாமிய மார்க்கம் அந்த மனிதனின் ஏழ்மையை பயன்படுத்தி அவனை சுரண்டி மென்மேலும் கஷ்டத்திற்கு உள்ளாக்கும் வகையில் வட்டி வாங்குவதை வன்மையாக தடை செய்வதோடு இறைகட்டளையை மீறி வட்டிக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவோருக்கு எதிராக திருமறைக் குர்ஆன் போர்ப்பிரகடனம் செய்கின்றது..
“நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.” (அல்குர்ஆன் 2:278, 279)
அழிக்கப்படும் வட்டிப் பொருளாதாரம்
மதங்கள் தடை செய்யும் வன் கொடுமையான வட்டி மூலம் பொருளாதாரத்தை பெருக்க முனைவோரின் பொருளாதாரம் அழிக்கப்படும் என சர்வ வல்லமை பொருந்திய ஏக இறைவன் எச்சரிக்கின்றான்.
“அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.” (அல்குர்ஆன் 2:276)
கொடிய நரக நெருப்பும் வட்டியும்
ஏக இறைவனின் கட்டளைகளை மீறி வட்டியை உண்போருக்கு கொடிய நரகம் தயார் செய்யப்பட்டுள்ளதாக இறைவேதம் திருக்குர்ஆன் எச்சரிக்கின்றது.
“நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள். (ஏக இறைவனை) மறுப்போருக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள நரகத்தை அஞ்சுங்கள்!” (அல்குர்ஆன் 3: 130,131)
அழியும் வட்டியும் பெருகும் தர்மமும்
சமுதாயத்தின் சாபக்கேடான வட்டி அல்லாஹ்வின் அருளை இழக்க செய்துவிடும்.
“மனிதர்களின் செல்வங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக நீங்கள் வட்டிக்கு கொடுப்பது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை. அல்லாஹ்வின் முகத்தை நாடி ஸகாத் கொடுப்பீர்களானால் இத்தகையோரே பெருக்கிக் கொண்டவர்கள்” (அல்குர்ஆன் 30:39)
துன்புறுத்தும் வேதனையும் வட்டியும்
“யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும், வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். (அல்குர்ஆன 4:160,161)
சாபத்திற்குரிய வட்டி
“வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.” (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் -3258)
பைபிளின் ஒளியில் வட்டி
கிறிஸ்த்தவ அன்பர்களால் இறைவேதமாக நம்பப்படுகின்ற பைபிளின் யாத்திராகமம் நூல் வட்டி குறித்து பின்வருமாறு குறிப்பிடுகின்றது
“உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டி வாங்குகிறவர்கள் போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம்.” (யாத்திராகமம் 22:25)
பைபிளின் பழைய ஏற்பாடு நூலான உபாகமம் நூல் வட்டி குறித்து குறிப்பிடுகையில்,
“கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும் ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டி வாங்காயாக.” (உபாகமம் 23:19 )
என்று குறிப்பிடுகின்றது.
பைபிளின் பழையஏற்பாட்டு – நியாயப் பிரமாண – நூல்களான யாத்திராகமம், உபாகமம் போன்றவைகள் மோசே-மூஸா-(அலை) அவர்களின் போதனைகள் என்று நம்பப்படுகின்றது. உபாகமம் ஓரிறைக் கொள்கை குறித்து குறிப்பிடுகையில்,
“ஆகையால் உயர வானத்திலும், தாழ பூமியிலும் கர்த்தரே தேவன். அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து…’ (உபகாமம் 4:39) என்று கூறுகின்றது.
யார் ஒருவர் ஏக இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்காது, அவனுக்கு இணையாக எதையும் கருதாது வட்டி போன்ற இறைவன் தடுத்த பாவங்களில் இருந்து தவிர்ந்து வாழ்கின்றாரோ அவர் ஒரு முஸ்லிம். எனவே, இறைத்தூதர் மோசே (அலை) அவர்கள் ஒரு முஸ்லிமாவார்கள்.
மோசேயின் நியாயப் பிரமாணத்தைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்து இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
“நியாயப் பிரமாணத்தையானாலும், தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள். அழிக்கிறதற்கு அல்ல. நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்து போனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதையெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் சிறியவன் என்னப்படுவான். இவைகளைக் கைக் கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் எனப்படுவான். வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 5:17-20)
எனவே, ஏக இறைவனைத் தவிர யாரையும் வணங்காது, அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது, சர்வ வல்லமை பொருந்திய இறைவனையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்கின்ற ஏகத்துவக் கொள்கையை போதித்ததோடு, கொலை, விபச்சாரம், களவு, பொய்ச்சாட்சி, பெற்றோரை துன்புறுத்தல், ஜீவகாருண்யமின்மை, வட்டி போன்ற கொடிய பாவங்கள் குறித்து மக்களுக்கு எச்சரித்த இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிமாவார்கள்.
இறைவன் நாடினால் இயேசு ஒரு முஸ்லிம் என்பதற்கான சான்றுகளை தொடர்ந்தும் நோக்குவோம்.
V
கடந்த தொடர்களில் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிம் என்பதை நிரூபித்து நிற்கும் ஓரிறைக் கொள்கையை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் பைபிள் வசனங்கள், கொலை, விபச்சாரம், களவு, பொய்ச்சாட்சி, பெற்றோரை துன்புறுத்தல், ஜீவகாருண்யமின்மை, வட்டி போன்ற கொடிய பாவங்களிலிருந்து தவிர்ந்து வாழ்ந்தாலே ஒருவர் நித்திய ஜீவனை அடையமுடியும்- நியாயத் தீர்ப்பு நாளில் வெற்றியடைய முடியும் என்பதற்கான சான்றுகளை கடந்த தொடர்களில் நோக்கினோம்.
அதன் தொடரில் வன்கொடுமையான இலஞ்சம் குறித்து திருமறைக் குர்ஆனும், பைபிளும் என்ன சொல்கின்றது என நோக்குவோம்.
இன்றைய உலகை ஆட்டிப் படைக்கின்ற ஒரு அரக்கன்தான் இலஞ்சமாகும். பொதுவாக இலஞ்சம் என்பது ஒருவர் தனது கடமையைச் செய்வதற்கோ அல்லது மீறுவதற்கோ கொடுக்கப்படும் கையூட்டே இலஞ்சம் எனப்படும்.
இன்று இந்த இலஞ்சம் எனும் அரக்கனின் கோரப்பிடியில் உலகில் பல நாடுகள் சிக்கித் தவிக்கின்றன. பொதுவாக மேலைத்தேய நாடுகளில் கடமையை மீறுவதற்கு இலஞ்சம் வழங்கப்படுகின்றது என்றால் நமது நாடுகளில் கடமையை செய்வதற்கு இலஞ்சம் வழங்கப்படுகின்றது.
இந்த இலஞ்சம் குறித்து இஸ்லாமிய மார்க்கமும் கிறிஸ்த்தவ மதமும் என்ன சொல்கின்றது என பார்ப்போம்.
திருக்குர்ஆன் ஒளியில்..
இலஞ்சம் என்பது ஒரு பாவம் என இறைவேதம் திருக்குர்ஆன் சான்று பகர்கின்றது.
“உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்!” (அல்குர்ஆன் 2:188)
இலஞ்சம் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில்,
“தீர்ப்புக்காக லஞ்சம் கொடுப்பவனையும், லஞ்சம் வாங்குபவனையும் அல்லாஹ்சபிப்பானாக என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்)
“லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), ஆதாரம் : இப்னுமாஜா)
எனவே, திருமறைக் குர்ஆனும், நபிகளார் (ஸல்) அவர்களும் இலஞ்சம் என்கின்ற கொடிய பாவம் குறித்து மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
பைபிளின் ஒளியில் இலஞ்சம்
கிறிஸ்த்தவர்களால் இறைவேதமாக நம்பப்படுகின்ற பைபிள் இலஞ்சத்தை ‘பரிதானம்’ என அடையாளப்படுத்துகின்றது.
பைபிளின் பழைய ஏற்பாட்டு நூலான பிரசங்கி ‘பரிதானம்’ குறித்து குறிப்பிடுகையில், பரிதானம் உள்ளத்தை கெடுக்கும் என்கின்றது.
“பரிதானம் இருதயத்தைக் கெடுக்கும்” (பிரசங்கி 7:7)
தீர்க்கதரிசி சாலமோன் – சுலைமான்- (அலை) அவர்களின் போதனைகள் என நம்பப்படுகின்ற நீதிமொழிகள் இலஞ்சம் வாங்குபவன் நாட்டை அழிவுக்குள்ளாக்குவதாக குறிப்பிடுகின்றது.
“நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; பரிதானப்பிரியனோ அதைக் கவிழ்க்கிறான்” (நீதிமொழிகள் 29:4)
பைபிளின் பழைய ஏற்பாட்டு நூலான ஏசாயா இலஞ்சம் பெற்றுக் கொண்டு நீதிசெலுத்த தவறுபவர்களை நஷ்டவாளிகள் என அடையாளப்படுத்துகின்றது.
“பரிதானத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து, நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ!” (ஏசாயா 5:23)
தீர்க்கதரிசி யோபு -அய்யூப்- (அலை) அவர்களின் போதனைகள் என நம்பப்படுகின்ற யோபு அதிகாரம் பரிதானம் வாங்குபவர்களின் குடியிருப்புக்கள் நெருப்பைக் கொண்டு அழிக்கப்படும் என எச்சரிக்கின்றது.
“மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப் போம்; பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும்.” (யோபு 15:34)
மோசே-மூஸா-(அலை) அவர்களின் போதனைகள் என்று யூத, கிறிஸ்த்தவ மக்களால் நம்பப்படுகின்ற உபாகமம் நூல் நியாயத்தீர்ப்பு நாளில் சர்வ வல்ல பொருந்திய ஏக இறைவனாகிய கர்த்தரிடம் ‘பரிதானம்’ கொடுத்து தப்பிக்க முடியாது என்பதை பின்வருமாறு எச்சரிக்கின்றது.
“உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல” (உபாகமம் 10:17)
தீர்க்கதரிசி சாலமோன் – சுலைமான்- (அலை) அவர்களின் போதனைகள் என நம்பப்படுகின்ற நீதிமொழிகள் அதிகாரம், ஒரு மனிதன் கர்த்தருக்கு கட்டுப்பட்டு வாழ்பவனாக இருந்தால், “பரிதானங்களை வெறுக்க வேண்டும்” என போதிக்கின்றது.
“பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்; பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.” (நீதிமொழிகள் 15:27)
தீர்க்கதரிசி மோசேயின் போதனைகள் என்று யூத, கிறிஸ்த்தவ மக்களால் நம்பப்படுகின்ற யாத்திராகமம் நூல் பரிதானம் நீதிமான்களை தடம்புரளச் செய்துவிடும் என எச்சரிக்கின்றது.
“பரிதானம் வாங்காதிருப்பாயாக; பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும்.” (யாத்திராகமம் 23:8)
தீர்க்கதரிசி தாவீது (அலை) அவர்களின் போதனைகள் என்று யூத, கிறிஸ்தவ மக்களால் நம்பப்படுகின்ற சங்கீதம், பரிதானம் வாங்குபவர்கள் தீவினைக்குரியவர்கள் என எச்சரிக்கின்றது.
“அவர்கள் கைகளிலே தீவினையிருக்கிறது; அவர்கள் வலதுகை பரிதானங்களால் நிறைந்திருக்கிறது” (சங்கீதம் 26:10)
இறுதியாக, ஓரிறைக் கொள்கையை உரத்துச் சொன்னதோடு, பரிதானம் போன்ற பாவங்களிலிருந்து தவிர்ந்து வாழ்ந்தாலே நியாயத்தீர்ப்பு நாளில் வெற்றியடைய முடியும் என போதித்த மோசே, சாலமோன், யோபு (அலை) போன்ற இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட தீர்க்தரிசிகள் முஸ்லிம்களாவார்கள். அவர்கள் வரிசையில் வந்த, அந்த தீர்க்கதரிசிகளின் போதனைகளை உண்மைப்படுத்திய தீர்க்கதரிசி இயேசு (அலை) அவர்களும் ஒரு முஸ்லிமாவார்கள்.
இறைவன் நாடினால் இயேசு ஒரு முஸ்லிம் என்பதற்கான சான்றுகளை தொடர்ந்தும் நோக்குவோம்.
VI
கடந்த தொடர்களில் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிம் என்பதை நிரூபித்து நிற்கும் வகையில் ஓரிறைக் கொள்கையை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் பைபிள் வசனங்கள், கொலை, விபச்சாரம், களவு, பொய்ச்சாட்சி, பெற்றோரை துன்புறுத்தல், ஜீவகாருண்யமின்மை, இலஞ்சம், வட்டி போன்ற கொடிய பாவங்களிலிருந்து தவிர்ந்து வாழ்ந்தாலே ஒருவர் நியாயத் தீர்ப்பு நாளில் வெற்றியடைய முடியும் என்பதற்கான சான்றுகளை நோக்கினோம்.
அதன் தொடரில் இயேசு (அலை) அவர்கள் ஸலாம் உரைத்ததை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை நோக்குவோம்.
திருக்குர்ஆன் ஒளியில் ஸலாம்
முக்காலமும் உணர்ந்த சர்வ வல்லமை பொருந்திய ஏக இறைவன் கற்றுக் கொடுத்த வார்த்தையே ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ – உங்கள் மீது சமாதானம் உண்டாகட்டும் – என்கின்ற முகமனாகும்.
இஸ்லாம் கற்றுத்தருகின்ற முகமனானது சிறியவர், பெரியவர், ஏழை, பணக்காரர், அறிந்தவர், அறியாதவர் என சகல தரப்பினருக்கும், மரணவீடு, திருமண வீடு என துக்ககரமான, சந்தோசமான அனைத்து நிலமைகளிலும், எக்காலத்திற்கும், எச்சூழ்நிலைக்கும் பயன்படுத்தக் கூடியதாக உள்ளமை அதன் தனிச்சிறப்பாகும்.
ஸலாம் உரைப்பது குறித்து இறைவேதம் திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
“நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம்கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள்.” (அல்குர்ஆன் 24:27)“(முஹம்மதே!) நமது வசனங்களை நம்புவோர் உம்மிடம் வந்தால் ‘உங்கள் மீது ஸலாம்(சாந்தி) உண்டாகட்டும்.’ அருள் புரிவதைத் தன் மீது உங்கள் இறைவன் கடமையாக்கிக் கொண்டான். உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டால் அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’ எனக் கூறுவீராக!” (அல்குர்ஆன் 06:54)“நீங்கள் பொறுமையாக இருந்ததால் உங்களுக்கு ஸலாம் (சாந்தி) உண்டாகட்டும். இவ்வுலகின் தீர்ப்பு (உங்களுக்கு) நல்லதாக உள்ளது (என்று வானவர்கள் கூறுவார்கள்).” (அல்குர்ஆன் 13:24)“நல்லோராக இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி, ‘உங்கள் மீது ஸலாம் (சாந்தி) உண்டாகட்டும்! நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்!’ என்று கூறுவார்கள்.” (அல்குர்ஆன் 16:32)
ஸலாம் உரைப்பது குறித்து அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில்,
“இஸ்லாத்தில் மிகச் சிறந்த நல்லறம் எது?’ என்று ஒருவர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘உணவளிப்பதும், உனக்குத் தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என விடையளித்தார்கள்.” (நூல் : ஸஹீஹுல் புஹாரி- 12)
“வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கு ஸலாம் கூற வேண்டும். நடந்து செல்பவர் அமர்ந்து இருப்பவருக்கு ஸலாம் கூற வேண்டும். குறைவான எண்ணிக்கையில் இருப்போர் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் மீது ஸலாம் கூற வேண்டும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (நூல் : ஸஹீஹுல் புஹாரி- 6232)
“நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. ஒருவரை ஒருவர் நேசிக்காமல் நம்பிக்கை கொண்டவர்களாக முடியாது. ஒரு செயலைச் செய்தால் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பீர்கள். அச்செயலை நான் உங்களுக்குக் கூறட்டுமா?’ என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு ‘உங்களிடையே ஸலாமைப் பரப்புங்கள்’ என்றனர்.” (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்- 81)
“யஹூதிகள் உங்களுக்கு ஸலாம் கூறினால் அவர்கள் (அஸ்ஸலாமு அலைக்க எனக் கூறாமல்) ‘அஸ்ஸாமு அலைக்க’ என்று தான் கூறுகின்றனர். (உம்மீது மரணம் உண்டாகட்டும் என்பது இதன் பொருள்) எனவே வஅலைக்க (உன் மீதும் அவ்வாறு உண்டாகட்டும்) என்று கூறுங்கள் என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (நூல் : ஸஹீஹுல் புஹாரி- 6257)
யூதர்கள் ஸலாம் கூறுபவர்களாக இருந்தார்கள் என்பதை யூதர்களால் இறைவேதமாக- மோசேயின் போதனைகள்- என்று நம்பப்படுகின்ற பைபிளின் பழைய ஏற்பாட்டு நூற்களான உபாகமம் 20:10, ஆதியாகமம் 43:23 போன்ற அதிகாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
எனவே,, யூதர்கள் ‘அஸ்ஸலாமு அஸ்ஸலாமு அலைக்க’ என்று கூறாமல் ‘அஸ்ஸாமு அலைக்க’ என்று கூறியதால் அவர்களுக்கு ‘வஅலைக்க’ என்று கூறுமாறு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.
பைபிளின் ஒளியில் ஸலாம்
இயேசு (அலை) அவர்கள் எந்த நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்ததாக பிரகடனப்படுத்தினார்களோ அந்த நியாயப்பிரமாண- பழைய ஏற்பாட்டு- நூல்கள் முகமன் குறித்து பின்வருமாறு விபரிக்கின்றது.
“நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம் பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய்.” (உபாகமம் 20:10)
“கர்த்தர் சொன்னபடியே சாமுவேல் செய்து, பெத்லெகேமுக்குப் போனான்; அப்பொழுது அவ்வூரின் மூப்பர் தத்தளிப்போடே அவனுக்கு எதிர்கொண்டுவந்து, நீர் வருகிறது சமாதானமா என்றார்கள்.
அதற்கு அவன்: சமாதானந்தான்; கர்த்தருக்குப் பலியிடவந்தேன்; நீங்கள் உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொண்டு, என்னுடனே கூடப் பலி விருந்துக்கு வாருங்கள் என்றான்; மேலும் ஈசாயையும் அவன் குமாரரையும் பரிசுத்தம் பண்ணி, அவர்களைப் பலி விருந்துக்கு அழைத்தான்” (1 சாமுவேல் 16:4-5)
அதற்கு அவன்: உங்களுக்குச் சமாதானம்; பயப்படவேண்டாம்; உங்கள் தேவனும் உங்கள் தகப்பனுடைய தேவனுமாயிருக்கிறவர் உங்கள் சாக்குகளில் அதை உங்களுக்குப் புதையலாகக் கட்டளையிட்டார்; நீங்கள் கொடுத்த பணம் என்னிடத்தில் வந்து சேர்ந்தது என்று சொல்லி, சிமியோனை வெளியே அழைத்து வந்து, அவர்களிடத்தில் விட்டான். (ஆதியாகமம் 43:23)
இயேசு (அலை) அவர்களின் போதனைகள் என்று கிறிஸ்த்தவ சமுதாய மக்களால் நம்பப்படுகின்ற பைபிளின் புதிய ஏற்பாட்டு நூல்களான லூக்கா, யோவான் அதிகாரங்கள் இயேசு ஸலாம் உரைத்தது தொடர்பில் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
“ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்.” (லூக்கா 10:05)
“இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.” (லூக்கா 24:36)
“வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.” (யோவான் 20:19)
“இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி, (யோவான் 20:21)
“மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனே கூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.” (யோவான் 20:26)
இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் ஹிப்ரு அல்லது அராமிக் மொழி பேசியதாக நம்பப்படுகின்றது.
எனவே, பைபிள் தமிழ் மொழிபெயர்ப்புக்களில் “சமாதானம்” என்றும் Washington- RCK Cyber Services வெளியிட்ட King James ஆங்கில பைபிளில் Peace [be] unto you என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதற்கு இயேசு பயன்படுத்திய வார்த்தைப் பிரயோகம் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ அல்லது அதற்கு மிகமிக நெருக்கமான வார்த்தைப் பிரயோகமாகவே இருக்க முடியும். இதனை விக்கிபீடியா கலைக்களஞ்சியம் பின்வருமாறு உறுதிப்படுத்துகின்றது.
“Shalom aleikhem (or sholom aleikhem) (Hebrew: שָׁלוֹם עֲלֵיכֶם shālôm ʻalêḵem; Yiddish: שלום־עליכם sholem aleykhem) is a greeting version in Hebrew, meaning “peace be upon you” (literally: “peace to you”). The appropriate response is “aleikhem shalom” Yiddish: עליכם־שלום , or “upon you be peace”.
“The Arabic language variation is used by Muslims throughout the world: (السلام عليكم) as-salāmu ʿalaykum.”
“Aramaic and classical Syriac use ܫܼܠܡ ܠܟܘܢ Shlam ‘lekhon which means peace for you.”
மேலும் பார்க்க:
இறுதியாக, சர்வ வல்லமை பொருந்திய கர்த்தர் ஒருவரைத் தவிர யாரையும் வணங்க கூடாது, அவருக்கு இணையாக எதையும் கருதக் கூடாது, ஏக இறைவனையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்கின்ற ஏகத்துவக் கொள்கையை போதித்ததோடு, கொலை, விபச்சாரம், களவு, பொய்ச்சாட்சி, பெற்றோரை துன்புறுத்தல், ஜீவகாருண்யமின்மை, இலஞ்சம், வட்டி போன்ற கொடிய பாவங்கள் குறித்து இஸ்ரவேல் மக்களுக்கு எச்சரித்த, ’அஸ்ஸலாமு அலைக்கும்’ அல்லது அதற்கு மிகமிக நெருக்கமான வார்த்தைப் பிரயோகத்தை பயன்படுத்தி ஸலாம் உரைத்த இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிமாவார்கள்.
இறைவன் நாடினால் இயேசு ஒரு முஸ்லிம் என்பதற்கான சான்றுகளை தொடர்ந்தும் நோக்குவோம்.

No comments:
Post a Comment